Monday 20 July 2015

இந்தியாவிலேயே கள்ளச்சாராய சாவுகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்…Tamilnadu, No:1 State in INDIA in Deaths due to Spurious / Illicit Liquor...

இந்தியாவிலேயே கள்ளச்சாராய சாவுகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்…Tamilnadu, No:1 State in INDIA in Deaths due to Spurious / Illicit Liquor.
           
ஆதாரம்: தேசிய குற்ற ஆவணக் காப்பக(NCRB) 2005-2014 புள்ளிவிவரங்கள்
Source: National Crime Records Bureau(ncrb.gov.in) 2005-2014 Statistics
        
       
பத்திரிகை செய்தி (20-07-2015)  தொடர்புக்கு: 87545-80274, 87545-80270   
                     
இலஞ்ச-ஊழல் ஒழிப்பு, மதுஒழிப்பிற்காகச் செயல்பட்டு வரும் சட்ட பஞ்சாயத்து
இயக்கம் மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. 
 சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பிராந்தி பாட்டிலை 
அறிவியல் ஆராய்ச்சிக்கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தினோம். 
அதில் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் கலந்துள்ளது 
என்பதையும், பிராந்தியில் இருக்கக்கூடாத படிமங்கள்(Sedimentation) இருந்தது 
என்பதையும் வெளிப்படுத்தினோம்.

மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் வந்துவிடும். அதனால் பலர் உயிரிழப்பர். 
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று மின்சார & மதுவிலக்குத்துறை 
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொடர்ந்து கூறிவருகிறார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்(NCRB) 2014ம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் சமீபத்தில் 

வெளியாகியுள்ளது. இந்த சூழலில் 2005 முதல் 2014 வரையிலான கடந்த 10 ஆண்டில் இந்தியா 
முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடந்த கள்ளச்சாராய/விஷச் சாராயச் சாவுகள் குறித்து
 NCRB புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆய்வு செய்தது..

                 
ஆய்வின் முடிவுகள்: (2005 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில்)

- இந்தியா முழுவதும் நடந்த கள்ளச்சாராய சாவுகள்:  11032

- கள்ளச்சாராய சாவுகளில் முதல் மூன்று இடத்தில் 

உள்ள மாநிலங்கள் தமிழகம், கர்நாடகா, பஞ்சாப்

- தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள்:
1509;  
கர்நாடகாவில் (1421) , பஞ்சாபில் ( 1364 )

- மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் :
843


Spurious / Illicit Liquor Deaths in India  /
இந்திய அளவில் கள்ளச்சாராய சாவுகள்


Data on Statewide Illicit Liquor Deaths for last 10 years ( From 2005 – 2014 )
கடந்த 10 ஆண்டுகளில்( 2005 – 2014) மாநிலங்கள் வாரியாக
கள்ளச்சாராய மரணங்கள்


Tamilnadu
Karnataka
Punjab
Gujarat
ALL  INDIA
2005
53
79
212
40
724
2006
125
18
103
55
685
2007
135
142
175
84
1251
2008
101
188
219
91
1358
2009
429
180
185
68
1450
2010
185
235
183
107
1202
2011
481
184
105
221
1435
2012
0
211
20
143
731
2013
0
73
44
29
497
2014
0
111
118
5
1699
TOTAL
1509
1421
1364
843
11032


இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து, மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயத்தால் 
மக்கள் கொத்துக் கொத்தாக சாவார்கள் என்ற தமிழக அரசின் வாதம் அடிப்படை ஆதாரம் 
இல்லாதது என்பது தெளிவாகிறது. குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. 
இதனால், அங்கு கள்ளச்சாராயம் குடித்து பல்லாயிரக்கணக்கான பேர் செத்துவிடவில்லை.
 கடந்த 10 ஆண்டுகளில் அங்கு கள்ளச்சாராயத்தால் செத்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் 
கூட எட்டவில்லை. 843 என்ற அளவிலேயே இருக்கிறது.

சாராயத்தால் வரும் வரிவருமானம் இல்லாமலே ஆட்சி நடத்த முடியும் என்று குஜராத் அரசு 

நிரூபித்துள்ளது. ஆனால், தமிழகத்தின் சொந்த வரிவருவாயான 96083 கோடியில் ரூ.29672 கோடி 
(31% ) டாஸ்மாக் விற்பனை மூலம் வருகிறது. அதாவது மூன்றில் ஒருபங்கு சாராய விற்பனை 
மூலம் வருகிறது. படிக்க 4370 நூலகங்கள் உள்ள தமிழகத்தில் குடிக்க 6800 டாஸ்மாக் கடைகள் 
உள்ளன.

இப்படி, அரசாங்கமே வீதிக்கு வீதி டாஸ்மாக் கடை திறந்து சாராயம் வியாபாரம் நடத்திக் 

கொண்டுள்ள நிலையிலும் கள்ளச்சாராய சாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்பது 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவில் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக 
இருக்கிறது.( தேசிய சராசரியானது ஆண்டிற்கு 110 மரணங்கள் என்றுள்ள நிலையில், 
தமிழத்தின் ஆண்டு சராசரி 150 ஆக இருக்கிறது). குஜராத்தைவிட தமிழகத்தில், 
கள்ளச்சாராய இறப்புகள் கிட்டத்தட்ட இருமடங்காக இருக்கிறது.

மதுவிலக்கை அமல்படுத்தினால்… கள்ளச்சாராய சாவுகள் அதிகரி்க்காதா..?
உதாரணத்திற்காக ஒரு கற்பனை புள்ளிவிவரத்தைப் பார்ப்போம்:
டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது, கடந்த 10 ஆண்டுகளில் 1509 பேர் கள்ளச்சாராயத்தால் 
 இறந்துள்ளனர். வருடத்திற்கு கிட்டத்தட்ட 150 பேர்.  மதுவிலக்கை அமல்படுத்தினால் 
இதுபோல் 10 மடங்கு கள்ளச்சாராய சாவுகள் அதிகரிக்கும் என்றாலும், 
அது ஆண்டிற்கு 1500 இறப்புகளில்தான் முடியும். ஆனால், அரசாங்கம் விற்கும் 
மெல்லக்கொல்லும் டாஸ்மாக் விஷத்தினால் வருடத்திற்கு சுமார் 2 இலட்சம் பேர் இறக்கிறார்கள்.
 பெரும்பாலானோர் கல்லீரல், சிறுநீரகம், நரம்பு, வயிறு தொடர்பான பிரச்னைகளில் சாகிறார்கள். 

ஒப்பீட்டு அளவில் பார்த்தால்கூட மதுவிலக்கை அமல்படுத்தினால் பல்லாயிரம் உயிர்கள் 

 ஆண்டுதோறும் பலியாவது தடுக்கப்படும். ஒரு உயிரும் கள்ளச்சாராயத்திற்கு பலியாகக்கூடாதே
 என்பதே எங்களது நோக்கம். மதுவிலக்கை அமல்படுத்தினால் தமிழ்நாடே கள்ளச்சாராயச்
 சாவுகளில் மிதக்கும் என்ற அரசின் போலியான வாதத்தை உடைக்கவே,
 மக்களுக்கு இதுகுறித்த புரிந்துணர்வை ஏற்படுத்தவே இதனை முன்வைக்கிறோம்.



மதுவிலக்கை அமல்படுத்தினால் “கள்ளச்சாராயம்” பெருகும் என்று அரசே கூறினால் இது மறைமுகமாக தங்களது காவல்துறை மீது தங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதற்கு ஒப்பாகும். முறையான வழிகளில் வரிவருவாயைப் பெருக்கி, ஆற்றுமணல்-தாதுமணல்-கிரானைட் போன்ற இயற்கை வளங்களின் விற்பனையை முறைப்படுத்தி – மக்களைச் சோம்பேறியாக்கும் இலவசத் திட்டங்களைத் தவிர்த்தால் தாராளமாக தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியும்.
                                     மதுவிலக்கை ஆதரிக்க மிஸ்டுகால்:  81441-66099

செந்தில் ஆறுமுகம்,                        
பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274, 8754580270


No comments:

Post a Comment